வழுக்கை தலையில் கூட முடி வளர வேண்டுமா? எலிவால் போன்று கூந்தலுக்கும் நிரந்தர தீர்வு
இன்றைய காலத்தில் வயதானவர்கள் மட்டுமின்றி குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு முடிஉதிர்தல், இளநரை, வலுக்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதில் வழுக்கைத் தலையுடன் இருப்பது அழகு என்றாலும், வயதான தோற்றத்தைத் தான் அளிக்கின்றது.
இந்த நிலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில், மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான உணவுப்பழக்கம், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிப்படுவதும் இதற்கு காரணமாக அமைகின்றது.
அதாவது தலைமுடி உதிரும் ஆரம்ப காலத்திலேயே, முடியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வழுக்கை ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
இன்று கடைகளில் முடி உதிர்விற்கு பல எண்ணெய்கள் வந்தாலும், தலைமுடி உதிர்வு குறைந்துவிடுவதில்லை. தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட அதற்கான சில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
எதனால் வழுக்கை ஏற்படுகின்றது?
வழுக்கை என்பது ஸ்கால்ப்பில் இருந்து அளவுக்கு அதிகமாக ஏற்படும் முடி உதிர்வைக் குறிக்கிறது.
தலையில் வழுக்கை விழுவதற்கு முக்கிய காரணம் பரம்பரை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், வயதாவதால் போன்ற காரணங்கள் இருக்கலாம்.
வழுக்கை தலையில் முடி மீண்டும் வளருமா?
வலுக்கை தலையில் முடி வளர்வது ஒவ்வொரு நபர்களின் மயிர்கால்களைப் பொறுத்ததாகும்.
மயிர்கால்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தாலோ அல்லது மறைந்துவிட்டாலோ அல்லது ஒரு ஆண்டில் ஒரு புதிய முடியைக் கூட உருவாக்கவில்லை என்றாலோ, அந்த மாதிரியான வழுக்கைத் தலையில் முடி வளர வாய்ப்பில்லை.
சில தருணங்களில் மயிர்கால்கள் திறந்திருந்தால் முடி வளர வாய்ப்புள்ளதால், இத்தருணங்களில் முடி வளர்ச்சியினைத் தூண்டும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை மற்றும் பால் பொருட்கள்
முட்டை மற்றும் பால் பொருட்களில் பயோடின் என்னும் வைட்டமின் பி7 இருப்பதால் முடி வளர்ச்சியைத் தூண்டும் சிறப்பான உணவாகின்றது.
முட்டையுடன் பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை எடுக்கும் போது, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் கிடைக்கும்.
ஓட்ஸ்
உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த காலை உணவாக எடுத்துக்கொள்ளும் ஓட்ஸ் வழுக்கை தலையை எதிர்க்கும் சிறப்பான உணவாம்.
இதில் உள்ள நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது. அதோடு ஓட்ஸில் மயிர்கால்களை வலுவாக்கும் பீட்டா க்ளுக்கன் உள்ளது.
பாதாம்
பாதாமிலும் பயோடின் மற்றும் மக்னீசியம் போன்ற ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
தினமும் பாதாமை சாப்பிட்டு வந்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, ஆரோக்கியமாகவும், வேகமாகவும் வளர்ச்சி பெறும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின் பி7 என்னும் பயோடின், தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவுவதோடு, மயிர்கால்களை நன்கு வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை தூண்டுகின்றது.
ஆகவே தலைமுடி உதிர்வால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஸ்ட்ராபெர்ரி
பொதுவாக பெர்ரி வகை பழமான ஸ்ட்ராபெர்ரியில் சிலிகா என்னும் கனிமச்சத்து அதிகளவில் உள்ள நிலையில், இது முடிவளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கின்றது.
அதோடு ஸ்ட்ராபெர்ரியில் எலாஜிக் அமிலம் உள்ளதால் முடி உதிர்வது மற்றும் முடி மெலிவதைத் தடுக்கக்கூடியது.
எனவே உங்களுக்கு எலிவால் போன்ற முடி இருந்தாலோ அல்லது முடி அதிகமாக கொட்டினாலோ, ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.