உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் மீண்டும் தூண்ட வேண்டுமா? இந்த அற்புத பொருட்கள் போதுமே..!
இன்றைய காலத்தில் ஆண்களும், பெண்களும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுள் முடி உதிர்வு முக்கியமானது ஆகும்.
போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கங்கள், முறையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் புவி வெப்பமயமாதலும் முடி உதிர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தலைமுடி உதிர்வதற்கு வயது ஒரு முக்கிய காரணம். வயது அதிகரிக்கும் போது, தலை முடி உதிர்வால் வழுக்கை விழ ஆரம்பிக்கும்.
மேலும் அப்படித் தலைக்குப் பூசும் ஜெல்களில் இருக்கும் ரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகிறது.
செயற்கை எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும். இதிலிருந்து விடுபட பணத்தை செலவு செய்யாமலே வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் முடி அதிகம் உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியின் வளர்ச்சியைத் தூண்ட முடியும்.
அந்தவகையில் உதிர்ந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஒருசில இயற்கை வழிகளை உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை நீரில் அலச வேண்டும்.
- தலைக்கு வாரந்தோறும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வதால், முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
- கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
- தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் ஒட்டுமொத்த முடியிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும்.
- இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும். தலைமுடி அதிகம் உதிர்ந்தால், மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளுங்கள்.
- இதனால் சத்து குறைபாட்டினால் முடி உதிர்ந்திருந்தால், அப்பிரச்சனை நீங்கி முடி ஆரோக்கியமாக இருக்கும்.
- எலுமிச்சை சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.