முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வளர உதவும் யோகாசனங்கள்
இப்போதுள்ளவர்கள் தலைவலியைக் கொடுப்பது இந்த தலைமுடிப் பிரச்சனைதான். முடிப்பிரச்சினையானது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வித மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் சில யோகாசனங்களைக் கொண்டு தீர்வு காணலாம்.
மனிதனின் மனதை ஒரு நிலைப்படுத்தி உடலை வலிமையாக வைத்து அமைதியாக செய்யும் யோகா மூலம் முடி வளர்ச்சி அடையும் அதியசம் இருக்கிறது.
இவ்வாறு நீங்கள் யோகாசனம் செய்யும் போது முடி வெடிப்பு, முடி வளர்ச்சி, பொடுகு பிரச்சினை போன்ற பலப்பிரச்சினைகளை தீர்க்க முடியும். அப்படி உங்களுக்கு உதவும் 3 ஆசனங்கள் தான் இது.
முடி உதிர்விற்கு யோகாசனம்
முதல் ஆசனமானது நீங்கள் குனிந்து இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் தரையில் வைத்து முக்கோன வடிவில் இருப்பது போல நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தசைகள் மற்றும் கால்கள் வலுவாகி உற்தசைகள் அழுத்தம் கொடுத்து வலுவடையும். இது மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களை அதிகரித்து முடி அதிகமாக வளர உதவுகிறது.
இரண்டாவது ஆசனமானது நேராக நின்று முட்டியை மடக்காமல் பாதி அளவில் வளைந்து நிற்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மன அழுத்தம், சோர்வு, பதற்றம் என்பவற்றை இந்த ஆசனம் உதவும். மேலும் இது ஒக்சிஜன் அளவை இந்த ஆசனம் அதிகரிப்பதால் முடி வலுவாக வளரும்.
மூன்றாவது ஆசனமானது மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நீட்டி இரு உள்ளங்கைகளும் உடலை ஒட்டி வலக்காலை முழங்காலை மடித்த வண்ணம் பின்னிழுத்துக்கொண்டு வயிற்றின் மேல் மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் காரணமாக முடியில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு இது தீர்வாக மாறுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |