இளநரை இருக்கும் தெரியாமலேயே போக வேண்டுமா? மருதாணியை கடைசி முயற்சியாக இப்படி அப்ளை செய்யுங்கள்!
இன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்தல், பொடுகு உள்ளிட்ட கூந்தல் பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த இளநரை பிரச்சனையைக் கையாள்வதில் அதிக சிரமத்தை சந்திக்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பரம்பரையாக வருவது, போதுமான அளவு பராமரிப்பு இல்லாதது, மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ, கண்டிஷனர், சீரம் போன்றவை இளம் வயதிலேயே நரை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.
இயற்கையான முறையில் எளிதில் இந்தப் பிரச்சினையைக் கடக்க முடியும். அப்படிப்பட்ட இயற்கை சிகிச்சையில் ஒன்றை இப்போது பார்க்கலாம். இளநரைக்கு மருதாணியை விட சிறந்த மருந்து எதுவுமில்லை. இதனைக்கொண்டு இளநரையை எளிதில் குணமாக்கலாம். அப்படியே மருதாணியை அரைத்துப் போடாமல், ஆரோக்கியமான பேக் செய்து அப்லை செய்யலாம்.
தேவையான பொருள்கள்; மருதாணி – 2 டீஸ்பூன் அவுரி இலை – 1 டீஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி – 1 டீஸ்பூன் இந்த மூன்று பொருள்களையும் வாணலியில் வறுக்கவும். அதனோடு தண்ணீர் அல்லது டீ டிகாக்ஷன் அல்லது பீட்ரூட் சாறு சேர்த்து, 10 மணி நேரம் வரை ஊறவைக்கவும். அடுத்த நாள் காலை கூந்தலை சுத்தம் செய்து எண்ணெய்ப்பிசுக்கு, அழுக்கு இல்லாமல் கூந்தலை அலசி எடுத்து உலரவிட்டு, அரைத்து வைத்த இந்த பேஸ்ட்டை எடுத்து நரைமுடி இருக்கும் இடத்தில் மட்டும் தடவுங்கள்.
பிறகு 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை மீண்டும் ஷாம்பு இல்லாமல் அலசுங்கள். கூந்தலை ஹீட்டர் எதுவுமில்லாமல் இயற்கையாக உலர விடவும். இளநரை போகும் வரை சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் இந்த பொடிகளை சேர்த்து காய்ச்சி அதை தலையில் தடவி வரவும். குறிப்பாக இந்த எண்ணெய்யை தவிர வேறு எந்த எண்ணெய்யையும் பயன்படுத்த வேண்டாம்.
அதேபோன்று அதிக ரசாயனம் கொண்ட ஷாம்புக்களையும் தவிர்த்துவிடுங்கள்.
இளநரை அதிகம் உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து இப்படி செய்யலாம். ஆண், பெண் என அனைவரும் இதனைப் பயன்படுத்தலாம்.