அருமையான குளு குளு ஃபலூடா...நொடியில் ரெடி!
கோடை காலத்தில் நல்ல குளு குளு என்று எதையாவது சாப்பிட வேண்டும் என்று தான் அனைவருக்கும் தோன்றும்.
அந்த வகையில் கோடைக்கு மிகவும் ஏற்ற ஒன்று என்றால், அது ஃபலூடா தான்.
இனி ஃபலூடா எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஐஸ்க்ரீம் செய்ய...
ஓரம் நீக்கிய ப்ரெட் - 3
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி
image - lines food
ஃபலூடா செய்வதற்கு...
நறுக்கிய பழங்கள் (திராட்சை, ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம்)
ஜெல்லி - 1 கப்
செர்ரி பழம் - 3
வேகவைத்த சேமியா - 1 கப்
காய்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
செய்முறை
முதலாவதாக பாலை நன்றாக சுண்ட காய்ச்சிக்கொள்ள வேண்டும்.
பின்னர் காய்ச்சிய பாலில் ப்ரெட் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.
பால் சூடாறியதன் பின்னர் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை 4 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவேண்டும். செய்து வைத்துள்ள ஐஸ்க்ரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ள வேண்டும்.
அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி 5 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்துவிட வேண்டும்.
நீளமான கண்ணாடி டம்ளர் ஒன்றை எடுத்து அதில் முதலில் சேமியாவைப் போட்டு, பின்னர் பழங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட வேண்டும்.
அதன்மேல் காய்ந்த திராட்சை, முந்திரி என்பவற்றைப் போடவும்.
இறுதியாக ஐஸ்க்ரீம், செர்ரி பழம், ஜெல்லி சேர்த்துக்கொள்ளவும்.
குளு குளு ஃபலூடா ரெடி.