கெட்ட கொழுப்புடன் போராடும் வாலிபர்களுக்கு தேவையான பானம்! எடையை சட்டென குறைக்கும்
பொதுவாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்காக பல முயற்சிகள் செய்தாலும் அதற்கான பலன் இருக்காது.
உடல் எடை குறைப்பு என்றால் அது சாதாரண விடயம் இல்லை. உடலில் படிந்திருக்கும் அனைத்து கெட்ட கொழுப்புக்களையும் கரைத்தால் மாத்திரமே இந்த எடை ஆரோக்கியமாக குறையும்.
சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிக்குமாறு கூறுவார்கள் ஏன தெரியுமா? இந்த கெட்ட கொழுப்புகள் உடலில் படியாமல் இருப்பதற்கு தான்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்கும் பானம் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சியா விதைகள் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - 1 டம்பளர்
- கேரட் - 1
- தக்காளி - 2
- கருப்பு மிளகு - 1/4
- இஞ்சி - 1 துண்டு
- தயிர் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் சியா விதைகளை போட்டு கொள்ள வேண்டும். அதில் 100 மி.லி அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றிய பின்னர் அரை மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும்.
இதன் பின்னர் காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதனை மிக்ஸி சாரில் போட்டு அரைக்க வேண்டும்.
அரைக்கும் பொழுது கருப்பு மிளகுவையும் அதில் சேர்த்து கொள்ளவும். மிளகு சேர்க்கும் பொழுது அதில், இஞ்சி ஒரு துண்டையும் சேர்த்து கொள்ளவும்.
ஒரு டம்பளர் எடுத்து அதில் தயிர் சேர்த்து அதனுடன் சியா விதைகளையும் சேர்த்து கொள்ளவும்.
இதனை நன்றாக கலந்து கொள்ளவும் பின்னர் மெல்ல கேரட் கலவையை சேர்த்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் சுவையான எடை குறைப்பு பானம் தயார்!