இந்த கோடைக் காலத்தை சமாளிக்க வீட்டிலேயே செய்யலாம் குளுகுளு ஐஸ்க்ரீம்: அதுவும் இளநீரில்!
பொதுவாக கோடை காலத்தில் நம் நாக்கு எதையாவது தேடிக்கொண்டிருக்கும். அதுவும் இந்த மாதத்தில் ஆரம்பித்ததும் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும்.
இதனால் நீங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்தக் கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க இது உதவும்.
இந்தக் காலத்தில் உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும் இவ்வாறு தாகம் ஏற்படுகையில் சில பானங்களை எடுத்துக் கொண்டால் அது நம் தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்ல, உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சி தருவதாகவும் அமைய வேண்டும்.
அந்தவகையில் இந்த கோடையை சமாளிக்க உங்களுக்கு ஏற்ற இளநீர் ஐஸ்கிறீம் செய்து சாப்பிடலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்
இளநீர் வழு - 2கப்
இளநீர்- 1 கப்
விப்பிங் க்ரீம் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சுண்டிய பால் - 1 கப்
செய்முறை
முதலில் தேங்காய் பால், இளநீர், இளநீர் வழு ஆகிய அனைத்தையும் நைஸாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுது மற்றும் க்ரீம் ஆகியவற்றை கலக்கவும். இப்போது ஹெவி கிறீமை கலந்து நன்றாக பொங்கி வரும்படி அடிக்கவும்.
இந்தக் கலவையுடன் சுண்டிய பால் சேர்க்கவும். பிறகு மீண்டும் ஒருமுறை அனைத்தும் கலக்கும்படி நன்றாக கிளறி விடவும்.
இப்போது தேங்காய் துருவலை போட்டு கிளறவும். ஐஸ்கிறீம் பேஸ்க்கான பொருள் தயார் ஆகிவிட்டது. இது மிக அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இப்போது ஐஸ்கிறீம் பேஸ் எடுத்து ஃபீரிசரில் வைக்கவும். இதில் சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஃப்ரீஸ் செய்யவும். முழுமையாக ஃப்ரீஸ் ஆன பிறகு, வெளியே எடுக்கவும்.
இப்போது உங்களுக்கான இளநீர் ஐஸ்கிறீம் தயார் ஆகி விட்டது.