அருமையான சிக்கன் சீஸ் பைட்ஸ் செய்து பார்க்கலாம் வாங்க...
சிக்கன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு சிக்கன் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக காணப்படுகின்றது.
சரி இனி சிக்கள் சீஸ் பைட்ஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Yummy tummy aarthi
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீஸ் துருவல் - 1 கப்
சோள மா - 3 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - தேவையான அளவு
சோயா சோஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சில்லி ப்ளெக்ஸ் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டர் - 1 தேக்கரண்டி
ஓரிகானோ - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - hungry for goodies
செய்முறை
முதலில் மிக்சியில் சிக்கனை போட்டு அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகுத்தூள், மிளகாய் தூள், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, ப்ரெட் தூள், பட்டர், சோயா சோஸ் என்பவற்றை அரைத்து கொள்ளவும்.
பின்னர் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். பின்னர் ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்க வேண்டும்.
அதற்கடுத்ததாக, செய்து வைத்துள்ள சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி அதை மெல்லிய ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி அதில் உருண்டையை வைத்து பூரி போல் தட்டவும்.
அதன் பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து மூடி சதுர வடிவில் செய்து கொள்ளவும். இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி, செய்து சைத்த உருண்டைகளை சோள மா கரைசலில் முக்கி ப்ரெட் தூளில் பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அருமையான சிக்கன் சீஸ் பைட்ஸ் தயார்.