இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கணுமா? இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க
இன்று பெரும்பாலான நபர்களின் பிரச்சினை என்ன என்றால், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவது தான். தற்போது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க என்ன செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் உணவுகள்
ஏகப்பட்ட வைட்டமின் மற்றும் தாதுக்களை கொண்டுள்ள கீரையில், கார்போ ஹைட்ரேட் குறைவாக இருக்கின்றது. இதனை நாம் எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால், நீரிழிவு நோயின் தாக்கம் குறைவதுடன், ரத்த சர்க்கரை அளவை சீராகவும் வைக்கலாம்.
இலவங்கபட்டை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவி செய்கின்றது. இதையும் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான கொழுப்புக்களை கொண்ட முட்டையிலும் இன்சுலின் திறன் மேம்படுத்த உதவுகின்றது.
ஸ்ட்ராபெர்ரி இன்சுலின் மற்றும் கொழுப்பை குறைக்க உதவி செய்வதால், நீரிழிவு நோயாளிகள் ஸ்ட்ராபெர்ரி நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.