அடிக்கடி சண்டை வருதா? அது நல்லதாம்!
பொதுவாக சண்டை வந்தாலே அந்த உறவுக்குள் அன்பும் புரிதலும் இருக்காது என்று கூறுவார்கள். எந்தவொரு உறவாக இருந்தாலும் சரி, அது கணவன் மனைவி, காதலர்கள், நண்பர்கள், சகோதரர்கள் என எந்த பந்தமாக இருந்தாலும் வாக்குவாதங்களும் சண்டைகளும் நிச்சயமாக வந்துபோகும்.
அவ்வாறு சண்டை வருவதனால் நன்மைகளும் உண்டாம். அவை என்னவென்று பார்ப்போம்.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகள்
வெளிப்படைத் தன்மை - சண்டையில் ஏற்படும் வக்குவாதங்களின்போது தம்பதிகள் தங்களின் கருத்துக்களை வலுவாகவும் வெளிப்படையாகவும் தெரியப்படுத்துகின்றனர். இதனால் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் ஏற்படுகின்றது. அதுமாத்திரமின்றி நேர்மையான ஒரு தன்மையும் வெளிப்படுகின்றது.
பிரச்சினைகளை தீர்க்கும் திறன் - அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்பொழுது எதிர்வரும் காலங்களில் எழும் பிரச்சினைகளையும் எளிதாக தீர்க்கும் வழிகளை கண்டுகொள்வார்கள்.
நெருக்கம் அதிகரிக்கும் - கணவன் மனைவிக்குள் எழும் சண்டைகள் அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது. காரணம் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அவர்களை இணைந்து செயற்பட வைக்கும்.