வெளிச்சத்திற்கு வரும் சாண்ட்ரா ரகசிய ஆட்டம்..புட்டு புட்டு வைக்கும் கானா வினோத்
பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், சாண்ட்ரா கண்ணீருடன் போடும் நாடகத்தை கானா வினோத் புட்டு புட்டு வைத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 12 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
சாண்ட்ராவின் ரகசிய ஆட்டம்
இந்த நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்து ரம்யா ஜோ, வியானா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்த சாண்ட்ரா தற்போது தனிமையாகி விட்டார்.
உள்ளே வரும் பொழுது திவ்யாவுடன் நெருக்கமாக இருந்த சாண்ட்ரா தற்போது அவருக்கு எதிராக மாறி பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். விக்ரமிடம் சென்று திவ்யா பற்றி பொய்யான கருத்துக்களை பகிர்கிறார்.

இவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட விக்ரமிடம் கானா வினோத், “ பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் அவர்களுடைய விளையாட்டை விளையாட உள்ளே வந்திருக்கிறார்கள். கண்ணீரை தனக்கு சாதகமாகவும், திவ்யா மீது அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சாண்ட்ரா பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்...” என சாண்ட்ராவின் ரகசிய ஆட்டத்தை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிரஜனும் திவ்யாவுக்கு சாதகமாகவே பேசியிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |