புத்தாண்டிலும் வேலையை காட்டும் ராகு.. இரு பெயர்ச்சிகளால் வாழ்க்கையே மாறப்போகும் ராசியினர்
இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது என்பதால் 2026-ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆரவம் காட்டி வருகிறார்கள்.
நவகிரகங்களின் பெயர்ச்சிகளையும் ஜோதிடர் கூர்ந்து கவனித்து ராசிகளுக்கான பலன்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், 2026-ல் பல சக்திவாய்ந்த கிரகமான ராகு, குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்க்கையில் அசுபமான பலன்களை கொடுக்கப்போகிறார். 2026- ஆம் ஆண்டில் ராகு இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார்.
இதன்படி, ஆகஸ்ட் 2, 2026 அன்று கும்ப ராசியில் இருந்து அவிட்ட நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 2026-ல் மகர ராசிக்கும் பயணம் செய்கிறார்கள். இந்த இரு பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை உருவாக்கப்போகிறார்.
அந்த வகையில், புத்தாண்டில் நடக்கவுள்ள ராகு பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்தவர்களாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ராகு பெயர்ச்சி தரும் அமோக மாற்றம்

மிதுன ராசியினர்
- ராகு பெயர்ச்சி நடக்கும் சமயத்தில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அரிய வாய்ப்புக்கள் அதிகமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக செய்யாமல் வைத்திருந்த வேலைகளை இந்த காலப்பகுதியில் நீங்கள் முடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களின் பொருளாதாரம் இதுவரையில் இருந்தது போன்று அல்லாமல் உயர்வை காணும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் நீங்கள் நினைத்தது போன்று உங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.
துலாம் ராசியினர்
- ராகு பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு பலமான மாற்றங்கள் கொண்டு வரப்போகிறது. ராகு நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடையும் பொழுது சாதகமான விளைவுகள் அதிகமாக வரும். புதிய தொழில் ஆரம்பிக்கும் ஆசையில் இருப்பவர்கள் இந்த சமயத்தை பயன்படுத்தி தொழிலை ஆரம்பிக்கலாம். பண பிரச்சினைகளும் அடுத்த வருடம் உங்களுக்கு குறைவாகவே இருக்கும். உறவினர்கள் உங்களிடம் சிக்கல்களை கொடுக்காமல் இருப்பார்கள். ஆக மொத்தமாக கூறப்போனால் 2026ஆம் ஆண்டு நிம்மதியான ஆண்டாக இருக்கும். மற்ற ராசியினரை விட துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கப்போகிறது.
கும்ப ராசியினர்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிக்கான கதவு திறக்கப்போகிறது. வெற்றியின் உச்சத்தை புது வருடத்தில் நீங்கள் பார்க்கலாம். எப்போதும் இருக்கும் குழப்பமான மன நிலை இந்த பெயர்ச்சிக்கு பின்னர் உங்களுக்கு இருக்காது. ஆசைகள் அதிகமாக இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாம். பொருளாதார நிலைமையில் மாற்றம் இருக்கும். ராகு பெயர்ச்சிகள் உங்களுக்கு அதிகமான வாய்ப்புக்களை கொண்டு வரப்போகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).