சிம்ம ராசிக்குள் நுழையும் குரு பகவான்! 2026ல் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் இதோ
குரு பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிலையில், புது வருடத்தில் நிதி ஆதாயத்தையும், தொழில் முன்னேற்றத்தினையும் பெறும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிம்ம ராசியில் குரு
இன்னும் ஓரிரு வாரங்த்தில் 2026 புதிய ஆண்டு பிறக்கும் நிலையில், கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறும். இவ்வாறு மாற்றம் அடையும் போது ராசிகளையும் மாற்றிக்கொள்ளும்.
அந்த வகையில் தேவர்களின் குருவான வியாழன் கிரகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு குருபகவான் சூரியனால் ஆளும் சிம்ம ராசியினுக்குள் நுழைகின்றார்.
குருவின் இந்த முக்கிய மாற்றம் சில ராசிகளுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். அந்த வகையில் புத்தாண்டில் இரட்டிப்பான நன்மையினை பெற்றுக்கொள்ளும் ராசிகளை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
குரு பெயர்ச்சியானது ரிஷப ராசியினருக்கு நன்மை அளிக்கின்றது. நான்காவது வீட்டில் பயணிக்கும் குருவால், உங்களது வசதிகள் அதிகரிப்பதுடன், சொத்து மற்றும் வாகனம் வாங்கவும் வாய்ப்பு உள்ளது.
இத்தருணத்தில் தாயுடன் சுமூகமான உறவு இருப்பதுடன், அவர் மூலமாக பணத்தையும் பெறலாம். மூதாதையரின் சொத்துக்களை பெற வாய்ப்பு உள்ளது. மேலும் உங்களது வேலை மற்றும் வணிகத்திலும் முன்னேற்றம் காணப்படும்.

துலாம்
துலாம் ராசியினருக்கும் இந்த குரு பெயர்ச்சியானது நன்மை அளிப்பதுடன், வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
முதலீடு செய்வதை இந்த நேரத்தில் செய்தால், குடும்பத்திற்குள் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், சமூகத்திலும் செல்வாக்கு அதிகரிக்கின்றது. மேலும் இந்த காலத்தில் பங்கு சந்தை, லாட்டரி போன்றவற்றில் நீங்கள் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

தனுசு
குரு பகவான் தனுசு ராசியில் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கும் நிலையில், அதிர்ஷ்டத்தினை முழுவதுமாக பெற்றுக்கொள்வீர்கள். வெளிநாடு பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிகப்பெரிய ஒப்பந்தம் உங்களது வங்கிக் கணக்கின் இருப்பை அதிகரிக்குமாம். கடின உழைப்பிற்கு விரைவில் பலன் கிடைக்கும்
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ! என்ற மந்திரத்தினை குருவின் முழு பலன் கிடைப்பதற்கு தினமும் கூறவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |