அடிக்கடி வாய்ப்புண் வருதா? ஒரே தடவையில் ஆற்றும் மருந்து உங்க வீட்டு சமையல் இருக்கே
பொதுவாக உதட்டின் அடிப்பகுதியில் சில காரணங்களால் வரும் வாய் புண்கள், அவ்வளவு எளிதில் ஆறுவதில்லை.
வாயினுள் உதடுகள், நாக்கு, ஈறுகள் போன்ற மென்மையான சவ்வுகளில் ஏற்படும் புண்கள் வந்து விட்டால் நம்மாள் சரியாக பேசக் கூட முடியாத நிலை ஏற்படும்.
முதலில் வாய் புண்களை ஆற்றுவதற்கான வழியை தேடும் முன்னர், ஏன் வாய் புண்கள் வருகின்றன என்பதை தேடி அறிந்து கொள்வது அவசியம்.
உடல் சோர்வு, B12, இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகிய சத்துக்கள் குறைபாடு, மன அழுத்தம், காரம்/புளிப்பு உணவுகள், பல் வேலைகளால் ஏற்படும் காயம், சில மருந்துகள் பாவணை, நோய்த்தொற்றுகள், மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் வாய் புண்கள் ஏற்படுகின்றன.
ஒரு இடத்தில் வந்து விட்டால் அந்த இடமே பார்ப்பதற்கு வீங்கி, சிவந்து போய் இருக்கும். இன்னும் சிலருக்கு வாயை திறக்க முடியாத அளவு வலியும் இருக்கும்.

அந்த வகையில், வாய் புண்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்னென்ன? என்பதை பதிவில் பார்க்கலாம்.
காரணங்கள்
1. சோர்வு, மாதவிடாய், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கூட வாய்ப்புண்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
2. உங்களின் உடலுக்கு தேவையான வைட்டமின் B12, துத்தநாகம், ஃபோலேட், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் குறைபாடு இருந்தால் வாய்யில் புண்கள் வரலாம். இதுவொரு ஆரம்ப அறிகுறியாக எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது கடமையாகும்.

3. அமிலம் நிறைந்த உணவுகள் என கூறப்படும் சிட்ரஸ் பழங்கள், காரம் நிறைந்த உணவுகள் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் பொழுது உதட்டின் காயம் வரலாம்.
4. சிலர் தூக்க கலக்கத்தில் கடினமான பல் துலக்கை விடுவார்கள். அது தற்செயலாக இருந்தாலும், வாய் புண் ஏற்பட்டு விட்டால் காயம் ஆறுவது கடினமாகி விடும்.
5. பல் பிரேஸில் தொற்று இருந்தால், பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றின் பாதிப்பு காரணமாகவும் உதட்டில் காயம் வரும். மருந்து குடிப்பவர்களுக்கு அந்த மருந்தின் தாக்கம் காரணமாகவும் இப்படியான தாக்கங்கள் அடிக்கடி வரும்.
சிகிச்சை
- வீட்டு சமையலறையில் உள்ள மஞ்சள் பொடியை ஒரு கரண்டியில் எடுத்து, உப்பு, தண்ணீர் போட்டு நன்றாக கலந்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் மூன்று நாட்களில் உங்களுடைய புண்கள் ஆறும்.

- ஒரு கப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து தினமும் மூன்று தடவைகள் கொப்பளிக்க வேண்டும். இப்படி கொப்பளிக்கும் பொழுது வாயில் இருக்கும் பாக்ரீயாக்கள் இல்லாமல் போகும்.
- புளிப்பு, காரம், சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான பிரஷ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.
- ஏனெனின் பிரஸ் கடினமாக இருக்கும் சமயத்தில் அடிக்கடி உங்களுக்கு காயம் வர வாய்ப்பு உள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |