சப்பாத்தியை சுடும் போது எண்ணக்கூடாதா? ராகுவால் மோசமான பாதிப்பு ஏற்படும்
தினமும் சோறு, தோசை என்று சமைத்து சலித்துவிட்டால், அடுத்தகட்டம் என்ன செய்யலாம் எனப் பார்த்தோமானால், முதலில் நம் எண்ணத்தில் வந்து நிற்பது சப்பாத்தி தான். இந்த சப்பாத்தியைப் பற்றி நாம் தெரிந்திராத பல விடயங்கள் காணப்படுகின்றன.
பொதுவாகவே வீட்டில் இத்தனை அங்கத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று எண்ணி சப்பாத்திகளை செய்கின்றனர். உண்மையில் சப்பாத்தி செய்யும்போது அதை எண்ணி செய்வது குடும்பத்துக்கும் உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். மேலும் சப்பாத்திப் பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
முதலாவதாக சப்பாத்திகளை எண்ணி செய்வது
சப்பாத்தி செய்யும்போது, இதை சப்பாத்திகள் செய்துவிட்டோம் என்று எண்ணி எண்ணி செய்யும்போது, அது குடும்பத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சப்பாத்தி செய்யப்படும் கோதுமை போன்ற தானியங்கள் சூரியனுடன் தொடர்புடையது.
தட்டில் 3 சப்பாத்திகள்
தட்டில் ஒருவருக்கு 3 சப்பாத்திகளுக்கு மேல் வைத்து பரிமாறக் கூடாது என்று கூறப்படுகிறது. காரணம், இறந்தவர்களுக்கு படையல் போடும்போது அதிலும் 3 சப்பாத்திகள் வைக்கப்படுகின்றன. எனவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உயிரோடு இருப்பவர்களுக்கு 3 சப்பாத்திகள் வைக்கக்கூடாது.
மீதியான மாவில் சப்பாத்தி செய்யக் கூடாது
ஒருமுறை சப்பாத்தி செய்து அதில் கொஞ்சம் மா மீதியாக இருந்தால் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்தநாள் சப்பாத்தி செய்வதற்கு அந்த மாவை உபயோகப்படுத்துவது, ராகுவை மோசமாக பாதிக்குமாம்.
அதுமாத்திரமின்றி இது தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களையும் உருவாக்குவதால், மீதியான மாவில் சப்பாத்திகளை செய்யக் கூடாது.