வசூலை வாரிக் குறித்த தாய்கிழவி... வெற்றிக் கொண்டாட்டத்தில் மிகப்பெரிய நடிகர்களை விளாசிய ராதிகா
தாய் கிழவி படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ராதிகாவின் பேச்சு ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகின்றது.
தாய் கிழவி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்து வெளியான படம் தான் தாய் கிழவி. இப்படத்தினை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
வெளியான வெறும் 10 நாட்களில் 50 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்நிலையில் இவரது வெற்றிக் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் கண்கலங்கி பேசி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ராதிகா
நடிகை ராதிகாவின் நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு முழு காரணமாக இருக்கின்றது. குறித்த வெற்றியைக் குறித்து ராதிகா பேசுகையில் மிகப்பெரிய நடிகர்களையும், அரசியலுக்கு வந்துள்ள விஜய்யையும் தாக்கியுள்ளதாக பேசப்படுகின்றது.
அதாவது பெரிய நடிகர்களின் படத்தின் டிக்கெட் விலை 1000, 1500 என்று வசூலிக்கப்படும் நிலையில், தாய் கிழவி படம் அனைத்து பெண்களும் பார்க்கும் வண்ணமாக வெறும் 150 ரூபாயை டிக்கெட்டிற்கு வசூலித்துள்ளனர்.

தனது கலைப்பயணத்தில் இதுதான் மிகப்பெரிய வெற்றி என்றும், சித்தி சீரியல் வெற்றிக்குப் பின்பு பெண்கள் மத்தியில் நான் சேர்ந்துள்ளதை பார்க்க முடிகின்றது என்றார்..
குறித்த படத்திற்கு வரிவிலக்கு விதிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளதுடன், இதனை மாமன் சீராக அவர்கள் செய்ய வேண்டுமென்று கூறி விஜய்யை தாக்கியுள்ளாராம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |