உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறி இருக்கா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்!
பொதுவாகவே தற்காலத்தில் இதய நோய்களுக்கான அபாயம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. இதனால் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வலுவாக அதிகரித்து வருகின்றது.
ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, அதிகரித்த உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பல்வேறு காரணிகள் இதய நோய்களை ஏற்படுத்துவதில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துகின்றது.

உலகளவில், இதய நோய்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றது. இதில் கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், இந்த இறப்புகளில் 80 சதவீதமானவை தடுக்கக்கூடியவையாகவே இருக்கின்றது.
அந்தவகையில் இதய நோய்களின் மிக முக்கியமான, அலட்சியப்படுத்தவே கூடாத அறிகுறிகள் தொடர்பிலும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்க தினசரி உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய நோய்களின் பொதுவான அறிகுறிகள்
மார்பு வலி: மார்பு வலி அல்லது அழுத்தம் என்பது இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அறியப்படுகின்றது.தொடர்ச்சியான மார்பு வலி குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது ஆரம்பத்தில் கனமாக, அழுத்தமாக, இறுக்கமாக அல்லது எரியும் உணர்வு போல உணரலாம். சிலர் மன அழுத்தம் அல்லது உடல் செயல்பாடுகளின் போது மார்பு வலியை உணரலாம் இதய நோய் அபாயம் தீவிரமடையும் போது ஓய்வில் இருக்கும்போது கூட மார்பு வலி மற்றும் இருக்கம் ஏற்படலாம்.

மூச்சு திணறல்: இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய சிரமப்படும்போது, நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது வழக்கமான செயல்களைச் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம்.காரணம் இன்றிய மூச்சுத் திணறல் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
அதிக சோர்வு: இதயம் போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்காதபோது தெளிவான காரணமின்றி தொடர்ந்து சோர்வு ஏற்படலாம். இந்த வகையான சோர்வு பெரும்பாலும் படிப்படியாகத் ஆரம்பிக்கும் குறிப்பாக இந்த அறிகுறிகள் பெண்களில் அதிகம் உணரப்படலாம்.

பரவும் வலி: இதயம் தொடர்பான வலி மார்பைத் தாண்டி கைகள், தாடை, தோள்கள், கழுத்து அல்லது மேல் முதுகு வரை பரவக்கூடும். இந்த வகையான கதிர்வீச்சு வலி பெரும்பாலும் உழைப்பு அல்லது மன அழுத்தத்தின் போது தோன்றும் மற்றும் அமைதியாக இதயப் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
படபடப்பு: வேகமான, படபடக்கும் அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்புஅடிக்கடி ஏற்படும் போது இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அது போன்ற அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதால், உயிராபத்தை தவிர்க்கலாம்.
அபாயத்தை குறைக்கும் உணவுகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் : பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் செரிவாக இருப்பதால், கலோரிகள் குறைவாக இருக்கும் இவ்வாறான உணவுகள் இதயத்தை கொழுப்பு படிவில் இருந்து பாதுகாக்க உதவும். அவற்றின் உட்கொள்ளலை அதிகரிப்பது இறைச்சி மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்ற அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும் துணைப்புரியும்.

அவகாடோ: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கிய கொழுப்புக்கள் அதிகளில் இருப்பதால் அடிக்க அவகாடோவை உணவில் சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் நேடியாக தாக்கம் செலுத்துகின்றது.

செர்ரி: அதில் செரிந்து காணப்படும் என்டி ஆக்ஸிடன்கள் இதயத்தின் ரத்த நாளங்களை பாதுகாக்கவும், வீக்கத்தை குறைத்து மாரடைப்பு அபாயத்தை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

டார்க் சாக்லேட்: இதய நோய்களின் ஆபத்தை குறைப்பதற்கு தினசரி ஒரு சிறிய அளவில் டார்க் சாக்லேட் சாப்படுவது பெரிதும் துணைப்புரியும்.இதய நோய்க்கு மாத்திரமன்றி, பக்க வாதம், நீரிழிவு நோய்களுக்கும் இது தீர்வு கொடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: பொதுவாகவே சிட்ரிக் அமிலத்தை செரிவாக கொண்டுள்ள இந்த பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்ராசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களின் ஆபத்தை கணிசமாக குறைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |