அமாவாசை படையலை காகம் சாப்பிட வில்லை என்றால் என்ன? ஜாக்கிரதை.... முழுசா படிங்க!
அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைக்கு வைத்து வருகின்றோம்.
எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே சமைக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான்.
ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள்.
தை அமாவாசை தினமான நாளை காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள்.
அப்படி காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை.
காகம் சாப்பிடாமல் திரும்பி போனால் முன்னோர்கள் ஆசிர்வாதம் கிடைக்க வில்லை என்று அர்த்தமாம்.
முன்னோர்கள் இறந்த திகதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உணவு அளிப்பதற்கு காரணம் இதுதான்.
பித்ரு பூஜை செய்து காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது நாம் குளித்து விட்டு தான் செய்ய வேண்டும். முன்னோர்கள் இறந்த திகதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.
எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
தை அமாவாசை தினமான நாளைய தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.