உடல் எடையை குறைக்க அதிக சிரமமா? சீரக தண்ணீர் செய்யும் அற்புதம் இதோ
நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். இந்த சீரகம் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்துகிறது. அத்துடன் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரகம்
தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம்.
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால் தொப்பையைக் குறைக்கலாம்.
மேலும் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சீரகம் பயன் படுகிறது.
சீரகத்தை வேறு சில உணவுடன் கலந்து சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்
தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
சீரகப் பொடியை நீரில் சேர்த்து தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடையைக் குறையும்.