எதிர்நீச்சல் சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?
தற்போது தொலைக்காட்சிகளின் மக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள். எ
திர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
நடிகர்களின் சம்பளம்
இந்த சீரியலில் பல திருப்புமுனைகளும் அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணமே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான்.
அந்தவகையில் அவர்கள் நாள் ஒன்றுக்கு பெறும் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகனை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தான் ஆதிகுணசேகராக மிரட்டும் மாரிமுத்து.
இவருக்கு நாள் ஒன்று 20,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும், மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபா சம்பளமும் சபரி பிரசாந்த் மற்றும் நடிகை பிரியதர்ஷினி ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |