பாரதி கண்ணம்மாவில் ரோஷினியின் ஒருநாள் சம்பளம் இதுவா?
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷிணி ஹரிபிரியன் விலகியதை தொடர்ந்து அவர் ஒருநாளைக்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.
பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இருந்து, ஹீரோயினாக அசத்தி வந்த ரோஷினி ஹரிபிரியன் விலகிவிட்டார்.
இவருக்கு பதிலாக நடிக்கும் நடிகைக்கு, அந்தளவுக்கு வரவேற்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோஷ்னிக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதே சீரியலில் நெகட்டிவாக பாரதி ரோலில் நடித்துவரும் அருண் 20 ஆயிரமும், வெண்பாவாக நடித்துவரும் ஃபரினாவுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது.
சௌந்தர்யா ரோலில் நடித்து வரும் நடிகை ரூபஸ்ரீ தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
மற்ற நடிகர்கள் இவர்களை விட குறைந்த அளவு சம்பளம் வாங்குகிறார்கள் என கூறப்படுகிறது.