3 நாட்கள் வெறும் ஊறுகாய், தண்ணீர் மட்டுமே சாப்பாடு! எதிர்நீச்சல் ஆதி குணசேகரனின் சோகப் பின்னணி
3 நாட்களுக்கு வெறும் ஊறுகாய், தண்ணீர் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தேன் எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்து மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அதற்குப்பிறகு சில படங்களில் நடித்து வந்தவர். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு அபரீதமாக இருக்கிறது. அவருடைய முகபாவனை ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
சோக பின்னணி
சீரியலில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் இவரின் முழு கதைகயைக் கேட்டால் கண்ணீரே வந்துவிடும். சாய் வித் சித்ரா எனும் நிகழ்ச்சியில் பேசுகையிலே அவர் தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது,
''நான் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த போது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தேன். அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் காசு இல்லாத நேரத்தில் என் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன்.
ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது. என் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில் அறையிலேயே தங்கிவிட்டேன்.
இதையடுத்து பசித்தது, வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு போனேன், அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
உடனே வேறு ஹோட்டலில் சாப்பிடலாம் என இருந்த என்னிடம் காசு இல்லை. சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனேன், அவர்களது அறைகளிலும் பூட்டு இருந்தது.
என்னை தவிர எல்லாருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்றுவிட்டார்கள். பசி வயிற்றை கிள்ளியது, என்ன செய்வது என தெரியவில்லை. அறையில் ஏதாவது உலர் உணவுகள் இருக்கிறதா என பார்த்தேன். ஒன்றுமே இல்லை.
அங்கு ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது. வேறு வழியில்லாமல் ஊறுகாயை நக்குவது அதன் காரத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, இப்படி 3 வேளையும் 3 நாட்களுக்கு செய்தேன்.
பிறகு 4ஆவது நாள் எனக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்குள் அறைக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர், பிறகு அங்கு குளுகோஸ் ஏற்றினார்கள்.
இப்படித்தான் ஒருகாலத்தில் கஷ்டப்பட்ட கதையை கூறி வருத்தப்பட்டார்.