“இந்த சீரியலில் ஒரு வித்தியாசம் இருக்கு”: எதிர்நீச்சல் சீரியலின் சீக்ரெட்டை மனம் திறந்து பேசிய ஜனனி!
தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இப்படியொரு விடயம் இருக்கிறது என சீரியலின் நாயகி மதுமிதா கூறியிருக்கிறார்.
எதிர்நீச்சல் ஜனனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலின் நாயகியாகவும் ஆதிகுணசேகரனின் வீட்டு கடைசி மருமகளாகவும் நடித்துவருபவர்தான் ஜனனி என்கிற மதுமிதா.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெறித்தனமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீக்ரெட்
மதுமிதா பிரத்தியேக சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றின் மூலம் பல தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். இதில் அவர் பேசியதாவது,
மற்ற சீரியல்களுக்கும், எதிர்நீச்சல் சீரியலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. "நான் முன்னாடி சீரியல் பண்ணும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் நிறைய பண்ண சொல்லுவாங்க.
நான் அப்படித்தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆனா இங்க நான் முழுவதுமாக எக் பாணியில் இயற்கையாகவே நடிக்கும் வகையில் இருக்கிறது.
இந்த சீரியலில் நான் முதல் தடவை பண்ணும் போது திருச்செல்வம் சார் பயந்துட்டாரு, 'எதுக்கு மா இவ்வளவு ஓவர் ஆக்டிங் பண்றே, அது எல்லாம் வேணாம்.
இந்த கேரக்டரை நீங்களா நினைச்சுட்டு உங்க வாழ்க்கையில் எப்படி நீங்கள் ரியாக்ட் பண்ணுவீங்களோ அந்த மாதிரி பண்ணுங்க'ன்னு சொன்னாரு. அது கொஞ்சம் வித்தியாசமா இருக்குன்னு தோணுச்சு.
பொதுவாகவே எல்லா சீரியல்களிலும் ஓவர் ஆக்டிங் இருக்கும் ஆனா இந்த சீரியல் ரொம்ப வித்தியாசமாக இருக்கு. மேலும், எல்லா சீரியல்லையும் ஹீரோயின் அப்புறமா நெகட்டிவ்வா வர்றவங்க இதுல மட்டும் தான் கவனம் செலுத்துவாங்க.
ஆனா இந்த சீரியல்ல எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. ஈஸ்வரி அக்கா, நந்தினி அக்கான்னு எல்லா கேரக்டருக்கும் மக்கள் கனெக்ட் ஆகிக்கிட்டாங்க.
இவர்கள் எல்லாரையும் விட மாரிமுத்து சார் ரொம்ப ஃபேமஸ் என அந்தப்பேட்டியில் கூறியிருந்தார்.