கின்னஸ் சாதனை படைத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை... பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை மோனிஷா கின்னஸ் சாதனை படைத்துள்ளது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஒட்டுமொத்த ஆண்களையும் கவர்ந்து வருகின்றது. அதிலும் இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரி முத்துவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து சக்கை போடுபோடும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் தத்ரூபமாகவே நடித்து வருகின்றனர். இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகின்றார்.
ஆதி குணசேகரனுக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மோனிஷா கின்னாஸ் சாதனை படைத்துள்ளாராம்.
நடிகை படைத்த கின்னஸ் சாதனை
இவர் மட்டுமின்றி இவரது தங்கையும் கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம். ஆம் நடிகை மோனிஷா poi weaves எனப்படும் பந்தை கயற்றில் கட்டி சுற்றும் போட்டியில் ஒரு நிமிடத்தில் 80 முறை சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் சிலம்பத்திலும் சிறந்து விளங்கும் மோனிஷா, சர்வதேச அளவில் பங்கேற்று தங்க பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் ஹார்ஸ் ரைடிங், ஜிம்நாஸ்டிக், மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங் என பல்வேறு திறமைகளை வைத்துக்கொண்டு நடித்துவரும் இவரை ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |