நான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் இது தான் நடக்கும்... சீரியல் பாணியில் பதில் கொடுத்த ஆதிகுணசேகரன்
எதிர்நீச்சலில் நடிக்கும் ஆதிகுணசேகரன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் இப்படித்தான் இருக்கும் என தன்பாணியில் பதில் கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
ஆதிகுணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் மாரிமுத்து
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பேசிய மாரிமுத்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது,
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பெரிய ப்ளாட்போர்ம் தான் இதில் கலந்துக் கொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகி விடலாம் ஆனால் இப்போது எனக்கு இருக்கும் ப்ரோஜெக்டில் இருப்பதால் இதனை விட்டு எங்கும் நகர்ந்து விட முடியாது.
அப்படி ஒரு வேளை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் வீட்டை எப்படி இரண்டாக்கி ஒரு உலுக்கு உலுக்கி விடுவேன். மேலும், இந்த சீசன் தான் பிக்பாஸ் வரலாற்றில் மறக்க முடியாத சீசனாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |