ஒட்டுமொத்த குடும்பம் முன்பு குணசேகரனையே மிரட்டிய நந்தினி... எதிர்நீச்சலில் அடுத்து நடக்க இருப்பது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனையே நந்தினி மிரட்டியுள்ள காட்சி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஒட்டுமொத்த ஆண்களையும் கவர்ந்து வருகின்றது. அதிலும் இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரி முத்துவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து சக்கை போடுபோடும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் தத்ரூபமாகவே நடித்து வருகின்றனர். இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகின்றார்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக எடுத்துக் காட்டி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். பெண்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் எந்த அளவிற்கு சமூகத்தில் எதிர்த்து போராட வேண்டும் என்பதையும் காட்டி வருகின்றது.
சமீபத்தில் ஆதிரைக்கு கரிகாலன் உடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இதனை எதிர்பார்க்காத மக்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சொத்து பிரச்சினை
அப்பத்தாவின் ஷேரில் 40% மருமகள்களுக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? அதே நேரத்தில் ஜீவானந்தம் அப்பத்தாவின் ரேகையை எடுத்துக்கொண்டு சென்றிருப்பதால் இனி என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் சென்று கொண்டிருக்கின்றது.
அப்பத்தாவின் சொத்து பங்கில் மருமகள்களுக்கும் பங்கு இருக்கின்றது... ஆனால் அதற்கு முன்பு அவர்கள் பெயரில் இருக்கும் கம்பெனியை எழுதி வாங்க வேண்டும் என்று குணசேகரிடம் ஆடிட்டர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில்ஜீவானந்தம் அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் இன்னும் இரண்டு நாளில் தனது பெயருக்கு கௌதம் மாற்றி தர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கௌதம் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியும், குழப்பமும் எழுந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் குணசேகரன் மருமகளிடம் கம்பெனி சொத்துக்களை மாற்றித் தர கையெழுத்து கேட்கின்றார். இதற்கு நந்தினி நான் இப்பொழுது கையெழுத்து போட மாட்டேனு சொன்னால் என்ன பண்ணுவீங்க என்று கேட்க... அதற்கு ரேணுகா அவரால ஒண்ணும் செய்ய முடியாது என்று நக்கலாக பேசியுள்ளார்.
மறுபுறம் சக்தியிடம் கையெழுத்து கேட்க, உடனே ஜனனி கையெழுத்து போடாதீங்க என்று தடுத்து நிறுத்தியுள்ளார்... அதுமட்டுமில்லாமல் குணசேகரனிடம் உங்ககிட்ட பேச பயம்னு நினைச்சீங்களா என்று சத்தமாக கேட்ட நிலையில், உடனே கோபத்தில் குணசேகரன் தனது கையை ஆட்டி அனைவரையும் எச்சரிக்கை செய்கின்றார்.
உடனே குணசேகரன் பேசும் டயலாக்கை நந்தினி... ஏய்.. இந்த குணசேகரனுடைய இன்னொரு முகத்த பாப்பீங்க.." அதான் மாமா நீங்க சொல்ல போறீங்க என்று தோரணை காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |