கையில் அரிவாள்மனையை எடுத்த ஆதிரை... ஆடிப்போன ஆதி குணசேகரன்!... பரபரப்பான எதிர்நீச்சல் சம்பவம்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யும் நிலையில், விருப்பமில்லாமல் கோபத்தில் அரிவாள்மனையை எடுத்து ஆதி குணசேகரனை நடுங்க வைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சீரியலில் சிறப்பு எண்ட்ரியாக வடிவுக்கரசி மற்றும் தேவயானி வருவதாக கூறப்படுகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ஆதிரைக்கு முதலிரவு சடங்குக்கு ஏற்பாடு செய்ய கோரியுள்ள நிலையில், விருப்பமில்லாத ஆதிரை உச்சக்கட்ட கோபத்தில் கையில் அரிவாள்மனையை எடுத்துள்ளார். இதில் ஆதி குணசேகரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமே நடுங்கி போயுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |