முன்னாள் காதலியுடன் ரொமான்ஸாக பேசும் ஆதி குணசேகரன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் மாரிமுத்து
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், ஆதிகுணசேகரனின் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த வீடியோவில் ஆதிகுணசேகரனின் முன்னாள் காதலியான சாருபாலாவுடன் வெட்கத்துடன் பேசுவது போலவும் அதற்கு ஏற்றாற்போல பாடலையும் ஒலிக்கவிட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
When she text you after so many years for no reason pic.twitter.com/JDQB9Mtty9
— ?? (@VS__offll) June 25, 2023
மேலும், இந்த சீரியலில் முன்னதாக ஆதிகுணசேகரன் சாருபாலாவுடன் விருப்பம் கொண்டிருந்தார், ஆனால் அவர் படிக்காத காரணத்தால் சாருபாலா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இதனைக் காரணமாக வைத்து இந்த வீடியோ தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |