கோமாவிலிருந்து திடீரென கண் விழித்த அப்பத்தா.. Call செய்வது யாருக்குணு தெரியுமா?
கோமாவிலிருந்து கண்விழித்த அப்பத்தா பக்கத்திலிருந்த செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாது சற்று வித்தியாசமான கதைக்களமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அப்பத்தாவின் 40% சொத்திற்கு ஆசைப்பட்டு அப்பத்தாவை கோமாவிற்கு அனுப்பி விட்டார். இது தொடர்பாக சக்தியின் மனைவி ஆதாரங்களை திரட்டி வருகிறார்.
கூடிய விரைவில் குணசேகரின் சூழ்ச்சி விளையாட்டு வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அப்பத்தாவை கோமாவில் வைத்து கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் பயன்படுத்தி கொள்கிறார்கள். தற்போது ஆதரையின் திருமணம் ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அப்பத்தா கோல் செய்வது யாருக்கு?
இந்த நிலையில் ஒடிட்டர் யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவிடம் கைநாட்டு வாங்குவதற்காக அறைக்குள் வந்து மாட்டிக் கொள்கிறார்.
அப்போது ரேனுகா அவரை அழைத்து சென்று கதிரின் அறையில் அமர வைக்கிறார்.
இதனை தொடர்ந்து குணசேகரன் ஒடிட்டருக்கு கோல் செய்து “ வேலை முடிந்ததா?” என விசாரித்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிலுள்ள அனைவரும் சென்று விட்டார்கள்.
நர்ஸை ஏமாற்றி கை நாட்டை வாங்குமாறு கத்தியுள்ளார். இது ஒரு இருக்கையில் கோமாவிலிருந்து கண் விழித்த அப்பத்தா, பக்கத்திலிருந்து செல்போனை செய்து அவசர அவசரமாக யாருக்கு கோல் செய்துள்ளார்.
இந்த கோல் ஜீவானந்ததிற்காக அல்லது ஜனனிக்கா? என சரியாக தெரியவில்லை. ஜனனி வெளியில் இருப்பதால் ஜீவானந்ததிற்காக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.