எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம்
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் சத்தியப்பிரியா பற்றி நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் இருக்கும் ஆதிகுணசேகரன் தான் அனைத்துப் பெண்களையும் அடிமைப்போல் நடத்துகிறார்.
அதனால் சீரியல் பார்ப்பவர்கள் எல்லாம் அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நான்கு அண்ணன் தம்பிகள், இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டார்கள்.
இந்த அண்ணன் தம்பிகளுக்கு தாயாராக நடிப்பவர் தான் சத்யப்பிரியா. இவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத பல தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எதிர்நீச்சல் விசாலாட்சி
சத்யப்பிரியா வெறும் சீரியல் நடிகை மட்டுமல்ல அவர் பல படங்களில் நாயகியாக நடித்து பிரபல்யமானவர். சத்யப்பிரியா ஆந்திராவைச் சேர்ந்தவர், இவரின் பெயர் சத்யவதி சினிமாவிற்கு பின் தான் சத்யப்பிரியா என மாறியிருக்கிறார்.
விஜயநகரத்தில் படிப்பை முடித்திருக்கிறார். சிறுவயதில் இருந்து முறைப்படி நாட்டியம் பயின்று 1000இற்கும் அதிகமாக நிகழ்ச்சியை அரங்கேற்றி பல பெறுமதியான பரிசில்களையும் பெற்றிருக்கிறார். முதன் முதலில் 1974ல் பாலக் துருவ் என்ற ஹிந்தி படத்தில் வில்லியாக அறிமுகமானார்.
பிறகு மலையாள படங்களில் நடித்து வந்தார். இவர் ஹிந்தி, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்தப்பிறகு தான் தமிழில் சத்யப்பிரியா என்ற பெயருடன் 1975ஆம் ஆண்டு மஞ்சள் முகமே வா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அந்தப்படத்தில் அவருக்கு பெரும் வரவேற்புக் கிடைக்கவே அடுத்தடுத்து இவள் ஒரு சீதை, முதல் இரவு, மாம்பழத்து வண்டுகள், தீபம் படத்தில் சிவாஜியுடன் வில்லி கேரக்டர் என பல படங்களில் நடித்தார்.
மேலும், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து 50ஆண்டுகளை சினிமாவில் நடித்திருக்கிறார். பிறகு 1979 ஆண்டு கன்னட தயாரிப்பாளர் முகுந்தன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியவர் பார்த்திபனின் புதிய பாதை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களிலும் வில்லியாகவும் நடித்திருக்கிறார்.
பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு பகல் கனவுதான், கோலங்கள்? சூர்யா, பாரதி நம்ம குடும்பம், ரோஜா கூட்டம், இதயம், வம்சம், கல்யாண பரிசு, ரன், மஹாலட்சுமி, நீதானே என் பொன்வசந்தம் என பல சீரியல்களில் நடித்து முடித்து விட்டுதான் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.