எதிர்நீச்சல் ஈஸ்வரிக்கு என்னாச்சு? காலில் காயத்துடன் வெளியான புகைப்படம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகாவின் காலில் காயத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிப்பவர் தான் ஈஸ்வரி என்கிற கனிகா.
இவரின் கதாபாத்திரம் படித்து விட்டு வீட்டு வேலையை பார்த்துக் கொண்டு, கணவனிற்கு அடங்கியிருக்கும் ஒரு பெண். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாற் போல இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது.
இவருக்கு இதுதான் முதல் சீரியல் இதற்கு முன் தமிழில் 5 ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமான கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர்.
நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
காலில் காயத்துடன்.....
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகா. அவ்வப்போது சீரியல் புகைப்படங்களையும், தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.குறித்த பதிவில் அந்த பதிவில்,
"ஒரு வாரம் முடிந்தது. இன்னும் 5 வாரங்கள் செல்ல வேண்டி உள்ளது. புதிய பூட்ஸ் உடன் நடக்க கற்று வருகிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.
மேலும், அந்தப் புகைப்படத்தில் காலில் அடிப்பட்டு வோக்கர் மூலம் நடப்பது போல இருக்கின்றது.