காதல் திருமணத்தால் வந்த சோதனை.. எதிர்நீச்சல் நந்தனிக்கு இவ்வளவு பெரிய மகனா?
எதிர்நீச்சலின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் பெண்களை அடிமையாக்கி கணவர்கள் செய்யும் சேட்டைகளை அழகாக காட்டி வருகிறார்.
இந்த சீரியலில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன்படி, குணசேகரனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய மவுசு இருக்கிறது.
மேலும் எதிர்நீச்சல் என்றாலே டுவிஸ்ட்கள் நிறைந்திருப்பதால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
குழந்தையுடன் போராடும் பிரபல நடிகை
இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தனி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை ஹரிப்பிரியாவின் திருமண வாழ்க்கை பாதியில் முடிவுற்ற நிலையில் இவருக்கு சுமார் 4 வயது ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது.
இவர் கடந்த 2012 ஆம் காதலித்து விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருக்கவில்லையாம்... இதனால் இருவரும் தற்போது பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்களாம்.
இதனிடையே இவர்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் குழந்தையுடன் தனித்து வருகிறாரா? நந்தனி என கமண்ட்களை குவித்து வருகிறார்.