உல்லாசக் குளியல் போடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி! ஆதிகுணசேகரனுக்கு தெரிய வந்தா...
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகா மாலைத்தீவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிப்பவர் தான் ஈஸ்வரி என்கிற கனிகா.
இவரின் கதாபாத்திரம் படித்து விட்டு வீட்டு வேலையை பார்த்துக் கொண்டு, கணவனிற்கு அடங்கியிருக்கும் ஒரு பெண். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாற் போல இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது.

இவருக்கு இதுதான் முதல் சீரியல் இதற்கு முன் தமிழில் 5 ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமான கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர்.
நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
நீச்சல் புகைப்படம்
இந்நிலையில் கனிகா, குடும்பத்துடன் மாலைத்தீவிற்கு சென்றிருக்கிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகா மாலைத்தீவில் கடலின் அடிவரைச் சென்று வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் நீங்க பண்றதெல்லாம் ஆதிகுணசேகரன் பாத்தா என்ன என்ன ஆகும் தெரியுமா? என கமெண்ட் செய்து வருகிறார்கள்.