40 வயதிலும் இளம் ஹீரோயின் போல ஜொலிக்கும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார் அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிப்பவர் தான் ஈஸ்வரி என்கிற கனிகா.
சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது.
கனிகா தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர்.
நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கனிகா கருப்பு நிறத்தில் அழகான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு 40 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.