இது தான் என்னோட சீக்ரட்! எதிர்நீச்சல் ஈஸ்வரியின் Beauty Tips
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகா தன்னுடைய அழகின் ரகசியத்தை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிப்பவர் தான் ஈஸ்வரி என்கிற கனிகா.
சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது.
கனிகா தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர்.
நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பியூட்டி டிப்ஸ்
இவர் இப்போதும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம் என சில பியூட்டி டிப்ஸ்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவருடைய வீட்டில் இருக்கும் துளசி மற்றும் கற்றாழையை பயன்படுத்துவது எப்படி எமது அழகை பராமரிப்பது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மேலும், இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தங்கள் ரசிகர்களுக்கு தயவுகூர்ந்து பயன்படுத்துங்கள் என அறிவுரை கூறி சமூகவலைத்தளங்களில் தெரிவித்து இருக்கிறார்.