எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜனனியை இப்படி பார்த்திருக்கிறீர்களா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்து வரும் மதுமிதா மோடர்ன் உடைகளில் எவ்வளவு ஸ்டைலாக இருக்கிறார் என பார்த்திருக்கிறீர்களா?
எதிர்நீச்சல் ஜனனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலின் நாயகியாகவும் ஆதிகுணசேகரனின் வீட்டு கடைசி மருமகளாகவும் நடித்துவருபவர்தான் ஜனனி என்கிற மதுமிதா.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெறித்தனமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இவர் பெங்களுரைச் சேர்ந்தவர்.
கன்னட நடிகையாக நான்கு ஆண்டுகள் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று பெரிய ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் எதிர்நீச்சல். இவரின் உண்மையான பெயர் மதுமிதாவாக இருந்தாலும், இவரின் நடிப்பால் ஜனனியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து விட்டார்.
இந்நிலையில் சீரியலில் எப்போதும் புடவையுடனும் சுடிதாருடனும் பார்த்துப் பழகிய ரசிகர்கள் இவர் மோடர்ன் உடையில் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.