சர்ச்சையான மருத்துவ குறிப்புக்களை பரப்பிய டாக்டர்- ரவுண்டு கட்டி கேள்வியெழுப்பிய அதிகாரிகள்!
சமூக வலைத்தளங்களில் தவறான மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமடைந்து வந்த டாக்டர் ஷர்மிகாவை மருத்துவ அதிகாரிகள் விசாரனை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய டாக்டர்
சமிபத்தில் சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு தவறான மருத்துவ குறிப்புக்களை கூறுவதாக பல விதமான சர்ச்சைகளில் எழுந்த நிலையில், கடந்த வாரங்களில் டாக்டர் ஷர்மிகாவை விசாரனைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு “தமிழ் நாட்டின் வித மருத்துவ கவுன்சில்” உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு, டாக்டர் சர்மிகா தனிநபராக கலந்துக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் ஷர்மிகா எவ்வாறு பதிலளித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி, நாம் அதிகமாக ஆடு, மாடு போன்ற மிருகங்களின் இறைச்சிகள் எடுத்துக் கொண்டால் அஜீரண கோளாறுகள் வரும் எனவும் 4 நுங்குகள் சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சியடையும் எனவும் நேராக படுக்காமல் குப்பற படுத்தால் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்படும் எனவும் ஓர் குலாப் ஜாமும் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை அதிகரிக்கும் போன்ற பல சர்ச்சையான குறிப்புகளை வழங்கியிருந்தார்.
மேலும் இந்த குறிப்புக்கள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பைக் கொடுத்தாலும், இதனை சில விமர்சகர்கள் ட்ரோல் செய்தாலும் இந்த விடயம் வைரலானது.
விசாரணை குழுவால் அனுப்பட்ட நோட்டிஸ்
இந்நிலையில் இந்த குறிப்புகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு “சீதா மருத்துவ கவுன்சில்” விளக்கம் கேட்டு ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிஸில், 24-01-2023 அன்று 11மணிக்கு நேரில் ஆஜராகும் படி கூறப்பட்டிருந்தது.
மேலும், இந்த விசாரணையில் தமிழ் நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் இணை இயக்குனர் பார்த்தவன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து குறிப்புகள் குறித்து சுமார் 1 மணி நேரமாக டாக்டர்ஷர்மிகாவை வைத்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி விசாரணை குழு விசாரணை செய்துள்ளது.
எழுத்து மூலமான விளக்கம்
இந்த விசாரனை தொடர்ந்து வெளியில் வந்த டாக்டர் ஷர்மிகா யாருக்கும் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார் மேலும் இவர் அந்த சர்ச்சைக்கு சரியான பதிலைக்கூறாமல் இருந்ததால் எதிர்வரும் பெப்ரவரி 10 திகதிக்கு முதல், எழுத்து வடிவிலான சரியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இவரின் மருத்துவம் குறித்து பல சார்பு மக்கள் அதிகமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் இவர்களின் கருத்துக்கள் பார்த்து யாராவது டிப்ஸை பின்னபற்றியிருந்தால் அது மருத்துவத்திற்கு எதிராக சென்றிருக்கும்.