பொய் குறிப்புகள் கூறி வசமாக சிக்கிய பெண் டாக்டர்! வச்சி செய்யும் விமர்சகர்கள்
தற்போது சமூக வலைத்தளங்களில் மருத்துவ குறிப்புகள் கூறி பிரபலமடைந்து வரும் டாக்டர் ஷர்மிகா தவறான மருத்துவத்தை மக்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ஷர்மிகா
இந்தியாவிலுள்ள பாஜக கட்சியின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருக்கும் டெய்சி சரணுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் எம்முடைய கதாநாயகி டாக்டர் ஷர்மிகா.
இவர் அரசாங்க வைத்தியர் இல்லையென்றாலும் தனியாக ஒரு கிளினிக் சென்டர் வைத்து ஆயுள் வேத வைத்தியசாலையை நிர்வகித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் தினமும் ஒரு ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்து வருகிறார்.
அப்பட்டமாக வெளிவந்த பொய்கள்
இதனை தொடர்ந்து சமிபத் தினங்களுக்கு முன்னர் வெளிவந்த வீடியோவில் 1 குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரு கிலோ எடை ஏறும் என கருத்து குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் எடையை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு 3 கிலோ எடை குறைந்தால் கூட பின்னர் ஒரே ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் சுமார் 3 கிலோ கிராம் எடை குறையும் என அப்பட்டமான பொய்யை பப்ளிக்காக கூறியுள்ளார்.
இந்த வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், “4 நுங்குகள் சாப்பிட்டால் பெண்களின் மார்ப்பகங்கள் பெரியதாகும்” என அடுத்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
இதனை பார்த்த பலர் வைத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு சமூக வலைத்தள பக்கங்கள் உட்பட பல விமர்சகர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து டாக்டர் சார்பிலிருந்து எந்த பதிவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.