ராஜகுமாரனை காதலித்தது ஏன்? முதன்முறையாக உண்மையைக் கூறிய தேவயாணி!
சினிமாவில் சிறந்த நடிகையாக எப்போதும் இருக்கும் தேவயாணி தனது காதல் கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
நடிகை தேவயாணி
தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவருக்கு சில காலங்களில் படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதன்முதலாக ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அந்த சீரியல் பல சாதனைகளையும் செய்தது.
தேவயாணியின் காதல்
தேவயாணியை காதலியாக பார்ப்பதற்கு முன்னர் கதாநாயகியாக பார்த்தவர் தான் இயக்குனர் ராஜகுமாரன். அவர் இயக்கிய படம் தான் நீ வருவாய் என இத்திரைப்படத்தில் தேவயாணி, பார்த்திபன், அஜித் என மூவரும் நடித்து பெரும் வெற்றிப் பெற்றது.
அந்தத்திரைப்படத்தில் வைத்து தான் ராஜகுமாரன் மீது தேவயாணிக்கு காதல் மலர்ந்துள்ளது. இதனை சூசகமாக இயக்குனர் தெரிந்துக் கொண்டாரா என்னவோ தெரியவில்லை மீண்டும் தேவயாணியையும் விக்ரமையும் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார்.
அந்தப் படப்பிடிப்பில் தான் ராஜகுமாரனின் அன்பு, அமைதியும் உழைப்பும் தேவயாணியை வெகுவாக கவர்ந்தது.
இந்தப் பக்கம் தேவயாணியின் கொஞ்சலான பேச்சும், இளகிய மனமும் ராஜகுமாரனுக்குப் பிடித்துப்போக தேவயாணி நம் வாழ்க்கைத்துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து இரு பக்கமும் காதல் வயப்பட்டனர்.
ராஜகுமாரன் மீதிருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம், என்னை நன்றாக பார்த்துக் கொள்வார், கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது, அதனால் அவரை வீட்டை விட்டு எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.