படப்பிடிப்பில் பிரபல நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட ராதிகா! நடந்தது என்ன?
படப்பிடிப்பில் நயன்தாரா பயங்கரமாக கத்தியதைக் கேட்டு நடிகை ராதிகா ஷாக் ஆகியதால் நடிகை சுஹாசினி தற்போது கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தனர்.
குறித்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநில் N சிவன் என்றும் உலக் தெய்விக் N சிவன் என்று தமிழ் மற்றும் பெங்காலி மொழி கலந்து பெயரை வைத்துள்ளனர்.
நயன் விக்கி ஜோடிகள் நானும் ரௌடி தான் படத்தில் தான் காதலிக்க ஆரம்பித்தனர். இப்படத்தில் இவர்களின் காதல் மலர்ந்த கதையை நடிகை சுஹாசினியிடம் விக்கி நேர்காணல் மூலம் பேசியுள்ளார்.
குறித்த படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள நிலையில், இந்த கதாபாத்திரத்தை தனது சொந்த அம்மாவின் குணத்தை வைத்தும், அவருடைய பெயரான மீனா குமாரி என்ற பெயரிலேயே உருவாக்கியதாக கூறியிருந்தார்.
மேலும் இப்படப்பிடிப்பில் நடிகை ராதிகாவிற்கு தெரியாமலே தானும் நயனும் காதலித்து வந்ததாக விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
மேலும் சுஹாசினி நடிகை நயன்தாரா இப்படத்தின் படப்பிடிப்பில், பயங்கர சத்தத்துடன் சைலன்ஸ் என்று கத்தியதாகவும், அதைக் கேட்ட ராதிகா மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தன்னிடம் கூறியதாக சுஹாசினி விக்கியுடன் கேட்டுள்ளார்.
இதற்கு விக்னேஷ் சிரித்தபடியே ஆம் என்று பதிலளித்துள்ளார். நடிகை ராதிகா நான் தான் இந்த மாதிரி கத்துவேன், என்னவிட ஜாஸ்தி கத்துறா இந்த பொண்ணு, நிஜமாவே என்னவிட டெரரா இருப்பா போல என நயன்தாரா குறித்து சுஹாசினியிடம் கூறியதை குறித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.