பெற்றோரை எதிர்த்து இயக்குனரை திருமணம் செய்ய காரணம் என்ன? தேவயானி ஓபன் டாக்
நடிகை தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டதுடன், தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
கணவரை சந்தித்த தருணம்
கணவரை சந்தித்த தருணத்தினையும், அவரை காதலித்த நிகழ்வினையும் சமீபத்தில் அவர் கூறியுள்ளார். சூர்ய வம்சம் படத்தில் துணை இயக்குனராக இருந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் துணை இயக்குனராக அவதானித்த ராஜ்குமாருடன் நடிகை என்ற நிலையில் இருந்து எதார்த்தமாகவே பேசி வந்துள்ளார்.
துணை இயக்குனராக இருப்பதால் ராஜ்குமார் நடிக்கும் படத்தில் தேவயானியின் அனைத்து விடயங்களையும் மிகவும் கவனம் செலுத்துவாராம். கம்மல், பொட்டு, வளையல் என அனைத்தையும் ஞாபகப்படுத்துவாராம்.
ஆரம்பத்தில் அவரை அவதானித்த போது இவர் தான் தனக்கு கணவராக வருவார் என்று சிறிதும் நினைக்காத தேவயானி சூர்யவம்சம் படம் முடிந்த பின்பு, நீ வருாய் என படத்தின் கதையை தேவயானியிடம் இயக்குனர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
நீ வருவாய் என படத்தில் தேவயானி
அப்பொழுது நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இரண்டு மூன்று ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுள்ளதாம். அத்தருணத்தில் தேவயானி தனது படத்தின் நடிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
குறித்த மூன்று ஆண்டுகளில் ராஜ்குமார் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் அவரிடம் பேசவும் இல்லை என்று கூறியுள்ளார். பின்பு 1999 மீண்டும் ராஜ்குமார் தேவயானியை சந்தித்து, இயக்குனராக படம் செய்வதற்கு சூப்பர் குட் பிலிம்ஸ் ஒப்புதல் வழங்கியதாகவும், நீ வருவாய் என படத்தினை நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறி, சம்மதம் வாங்கியுள்ளார்.
ராஜ்குமாரை திருமணம் செய்ய காரணம்?
இயக்குனர் ராஜ்குமாரை வீட்டை எதிர்த்து ஓடிவந்து திருமணம் செய்வதற்கு காரணம் குறித்து கேட்ட போது, காரணம் எதுவும் இல்லை... பிடிச்சிருந்தது என்றும், காதலுக்கு காரணம் வேண்டும் என்று இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
தற்போது நடிகை தேவயானி பிரபல தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றார்.