நடிகை தேவயானி தற்போது என்ன செய்கின்றார் தெரியுமா? துரோகியாக மாறிய கணவர்... ஒதுக்கிய நகுல்
நடிகை தேவயானி செய்து வரும் செயல் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு பக்கத்தில் மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்த பிளட்களை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றார்.
அடுக்கு மாடிகுடியிருப்பினை விவசாய நிலமாக மாற்றி இரண்டு ஏக்கரில் செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.
ஆல்யா மானசா தன் மகனுக்கு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு என்ன தெரியுமா?
தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டுமல்லி பூத்து குலுங்குகிறது.
திருவிழாவுக்காக சொந்த ஊர் சென்று இருக்கும் தேவயானியின் குடும்பத்தினர் தங்களின் மல்லி தோட்டத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
விவசாய நிலங்கள் அடுக்கு மாடிகுடியிருப்பாக மாற்றப்பட்டு வரும் நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் குறித்து அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
தேவயானி குடும்பத்திற்கு துரோகியாக மாறிய கணவர்
விவசாயத்தை தாண்டி தற்போது தேவையானி புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய சீரியல் புதுப்புது அர்த்தங்கள். இது திங்கள் முதல் சனி வரை இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகி வருகிறது.
வாழ்க்கையில் பணம், வெற்றி என்று அவரை தேடி எல்லாம் வந்து கொண்டிருந்தாலும் அவரின் குடும்பத்தை பிரிந்துதான் இருக்கின்றாராம்.
தேவயானியின் கணவர் ராஜகுமாரனை தேவயானி குடும்பம் துரோகியாக பார்க்கின்றார்களாம்.
எப்படி இருந்த வனிதா இப்படி ஆகிட்டாரே!
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையிலும் கூட இன்னும் குடும்பத்தினர் அவர்களை ஒதுக்கி தான் வைத்து வருகிறார்கள்.
குடும்பத்தினரை எதிர்த்து கல்யாணம் செய்தவர் என்று புறம் தள்ளி வைத்திருக்கின்றார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் தேவயானியின் அப்பா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.அதன்பிறகு தான் தேவயானியிடம் அவர் தம்பியான நடிகர் நகுல் மட்டும் பேசி வருகிறாராம். ஆனால் தேவயானி கணவர் ராஜகுமாரனை சுத்தமாக கண்டுகொள்வது இல்லையாம்.
இதை சமீபத்தில் ராஜ குமாரன் சித்ரா லட்சுமனன் நேரலையில் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
