சிம்புவுடன் பிரேக் அப் செய்ததற்கு இது தான் காரணம்! கணவர் முன்னிலையில் போட்டுடைத்த ஹன்சிகா
தன்னுடைய முன்னாள் காதலர் சிம்பை ஏன் பிரேக் கப் செய்தேன் என்பதை தன்னுடைய கணவர் முன்பே நடிகை ஹன்சிகா மோத்வாணி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் காதல்’என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததுடன், தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
இவர் பார்ப்பதற்கு நடிகை குஷ்பூ போன்று இருப்பதால் இவரை சிலர் “குட்டி குஷ்பூ” எனவும் அழைத்தார்கள்.
இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மேலும் நடிகை ஹன்சிகா மோத்வாணி திருமணத்திற்கு பின்னர் நடிக்கமாட்டார் என பலரும் நினைத்த நிலையில் தற்போது தான் சுமார் 6 திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
திருமணத்தை மீண்டும் படமாக்கிய நடிகை
இதனை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணி தன்னுடைய திருமணத்தை நயனை போல் படமாக்க திட்டமிட்டு அதனை எதிர்வரும் 10 ஆம் திகதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த திருமண வீடியோவிற்கு லவ் ஷாதி டிராமா என்ற பெயரையும் வைத்துள்ளார். அந்த வீடியோவில், "ஒரு மனிதனுக்கு அவனின் வாழ்க்கையில் முன்னாள் நடந்த விடயங்களை பற்றி பேசவும் கேட்கவும் கூடாது" என அழுது புலம்பும் காட்சியொன்று வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவரின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவி குறித்து பல விடயங்கள் விமர்ச்சிக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமமாக தான் இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிம்புவின் காதலை நான் தொடர விரும்பவில்லை
ஹன்சிகா இடையில் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு விடயம் தெளிவாக கூறியுள்ளார். “நான் சினிமாவில் இருக்கும் போது சிலருடன் உறவில் இருப்பது போன்று ஒரு விம்பம் இருந்தது, ஆனால் அந்த உறவை எனது வாழ்க்கையில் தொடர நான் விரும்பவில்லை” என கூறியிருக்கிறார். மேலும் “நான் ஊரறிய ஒருவருடன் உறவில் இருந்தால் அவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு உறுதியுடன் இருந்தேன்” எனவும் கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “தன்னுடைய கணவர் முன்பு ஹன்சிகா இது குறித்து பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.