இட்லி உப்புமா இப்படித்தான் உருவாகியது...! தேவயானியின் சுவாரஸ்ய திரைப்பயணம்
நடிகை தேவயானியின் திரைப்பயணம், காதல், சக நடிகர்களிடம் நடிப்பு போன்ற திரைப்பயணத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை தேவயானி
தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். காலம் செல்ல படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதன்முதலாக ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அந்த சீரியல் பல சாதனைகளையும் செய்தது. பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு புது புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் ரீஎன்ரி கொடுத்திருப்பார்.
திரைப்பயணம்
நடிகை தேவயானி தமிழில் அனைத்து உச்ச நடிகர்களுடன் நடித்திருக்கிறார். விஜய், அஜித், சரத்குமார், மம்முட்டி,விஜய்காந்த், கமல்ஹாசன் என அப்போதைய நட்சத்திர நடிகர்களில் படங்களில் நடித்து பிரபல்யமானவர்.
அதிலும் சூர்யவம்சம் திரைப்படம் எப்படி பேமஸ் ஆனதோ அதே போல இட்லி உப்புமாவும் அவ்வளவு பேமஸ் ஆனது. அது போலவே இன்னும் பல பேர் தேடி தேடி பார்க்கும் படங்களில் ஒன்று தான் காதல் கோட்டை.
இந்த திரைப்படத்தில் முகம் பார்க்காமல் கடிதம் மூலம் காதலித்துக் கொண்ட காலங்களில் இந்த திரைப்படம் தேவயானியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு அவரின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் முன்னேற்றமடைந்துக் கொண்டிருந்தது.
இது மட்டுமில்லாமல் தான் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும் இருக்கும் சுவாரஸ்ய பதிவுகளை நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
இது பற்றிய முழுமையான காணொளி இதோ,