கட்டுப்பாட்டிற்கு வந்த கொரோனா...! இட்லி, சாம்பார் தான் காரணம்
இந்தியாவை மட்டுமல்லாமல் முழு உலகையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது இந்த கொரோனா தான்.
இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பலி எண்ணிக்கையை கண்டிருக்கிறோம். தினம் தினம் ஒவ்வொரு சொந்த உறவுகளை இழந்து வாடியிருக்கிக்றோம்.
இப்படி பல உயிர்களை பலிதீர்த்த கொரோனா இன்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதற்கு காரணம் இட்லி, சாம்பார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
image: india tv news
ஆம், இட்லி சாம்பரால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது ஆய்வு கூறுகிறது.
இட்லி சாம்பாரின் மகிமை
அண்மையில், கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் இது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.
ஆய்வின் இறுதியில் இந்தியர்கள் இறைச்சி உணவுகளை 20 மடங்கு குறைவாக உண்கின்றனர் எனவும் மீன், பால், மது, பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர்.
Image: healthshots
மேலும், இத்தியர்கள் நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவு தேநீர் குடிப்பதாகவும், 2.5 கிராம் அளவான மஞ்சள் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதாகவும் நேயெதிர்ப்பு சக்தி ஏனைய நாடுகளை விட இந்தியர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்திய மக்கள் இட்லி சாம்பாரை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர் இதில் மஞ்சள் அதிகமான பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என குறிந்த ஆய்வில் வெளியாகியுள்ளது.