உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை பல மடங்காக அதிகரிக்கும் சட்னி: எதோடு சாப்பிட வேண்டும்!
பொதுவாகவே மனித உடலுக்கு சக்தி என்பது மிக மிக முக்கியமாகும்.
எமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும்.
எனவே, எமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த குடைமிளகாய் சட்னி உங்களுக்கு சரியானது. இந்த குடைமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குடைமிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
- புளி - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 10
- தேங்காய் - சிறிய துண்டு
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத்தூள் - தேவையான அளவு
- கடுகு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை எல்லாம் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
வதக்கிய பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.