10 நிமிடங்களில் சாம்பார் இட்லி செய்வது எப்படி?
சுடச்சுட பூப்போன்ற இட்லியுடன் சாம்பார், சட்னி என ருசிப்பதே அலாதி சுகம் தான்.
இப்போதெல்லாம் மினி இட்லி, இட்லி மஞ்சூரியன், பொடி இட்லி என வகைவகையான இட்லிகள் வலம்வரத் தொடங்கிவிட்டன.
இந்தபதிவில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு- ஒரு கப்
துவரம் பருப்பு - 50 கிராம்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பூண்டு - 2 அல்லது 3
சின்ன வெங்காயம்- 10 முதல் 15
கடுகு, எண்ணெய்- தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
துவரம் பருப்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மேலே சொன்ன உணவுப்பொருட்கள் அத்தனையையும் சேர்த்து மூடிவைத்து 3 விசில் விடவும்.
பின்னர் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இட்லி பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி சுடச்சுட இட்லி அவிக்கவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் இட்லி சாம்பாரை ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்தது மேலே சிறிதளவு கொத்தமல்லி தழைகளை தூவினால் சுவையான சாம்பார் இட்லி ரெடி!