குக் வித் கோமாளியில் நடப்பது இதுதான் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவாங்கி!
குக் வித் கோமாளி சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நிகழ்ச்சி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
எப்படா பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் என காத்திருந்து நிகழ்ச்சி முடிந்த அடுத்த வாரமே ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது இந்த நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி தற்போது முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் குக்குகளும் அவர்களுக்கு உதவி செய்யவும், மக்களை கவரவும் கோமாளிகள் என இரு அணிகள் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகளுக்கு தான் அதிக மவுசு.
சிவாங்கியின் உருக்கம்
கடந்த சீசன்களின் கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக கலக்கி வருகிறார். இந்த நிகழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குக்குகள் எலிமினினேட் செய்யப்படுவார்கள்.
இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் சுற்றில் ஷிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் கலந்து கொண்டனர்.
இதில் இந்தவாரம் விஜே விஷால் எலிமினேட் ஆக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஷால் ஏற்கனவே இரண்டு முறை குக் ஆஃப் தி வீக் விருதை வென்றுள்ளார்.
மேலும், ஷெரின், ஸ்ருஷ்டி, சிவாங்கி ஆகியோர் எலிமினேட் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என பலரும் தங்கள் விமர்சனத்தை தெரிவித்து வந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.
அதில், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே நான் எப்படி சமைக்கிறேன் என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதற்காக தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் பயிற்சி செய்கிறேன்.
நான் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிகுந்த கடின உழைப்பையும், பல தியாகங்களையும் உங்களை மகிழ்விப்பதற்காக செய்து வருகிறோம் மன உருக்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.
Okay….so a lot of confusion since the season has started on how I can cook?I train 6 to 7 hours a day prior the shoot to learn .Not only me. All the cooks there. So much of sacrifice from the daily routine has been done to showcase our best.
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023