குக் வித் கோமாளி எவிக்ஷனில் பாகுபாடு பார்க்கப்படுகின்றதா? சிவாங்கி போட்டுடைத்த உண்மை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதற்கு சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இதில் விசித்ரா, மைம் கோபி, காளையன், விஜே விஷால், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் உள்பட 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில், கடந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி தற்போது குக் ஆக கலக்கி வருகின்றார்.
இந்த சீசனில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் மைம் கோபியைத் தவிர மற்ற போட்டியாளர்கள் எவிக்ஷனுக்கு வந்த நிலையில், நேற்று விஜே விஷால் வெளியேற்றப்பட்டார்.
இவரின் வெளியேற்றம் நியாயமல்ல என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு குக் வித் கோமாளி சிவாங்கி விளக்கம் கொடுத்துள்ளார்.
சிவாங்கியின் விளக்கம்
அவர் கூறுகையில், “இந்த சீசன் தொடங்கியதில் இருந்தேன் நான் எப்படி சமைக்கிறேன் என்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஷூட்டிங்கிற்கு முன் தினமும் நான் 6 முதல் 7 மணிநேரம் வரை சமைத்து பயிற்சி எடுக்கிறேன்.
நான் மட்டுமல்ல எல்லாருமே அப்படித்தான். சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை நாங்கள் செய்கிறோம்.
கோமளிகளும் அவர்களது கெட்-அப்பிற்காக நிறைய சிரமம் எடுத்து தயாராகிறார்கள். நாங்கள் எல்லாம் இவ்வளவு கஷ்டப்படுவது உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே.
மேலும் இதனை ஒரு நிகழ்ச்சியாகவே பார்த்து மகிழுங்கள்.. ஒருவரது உழைப்பை உதாசினப்படுத்துவது மிகவும் சுலபம்... எங்களது உழைப்பைத் தாண்டி அந்த நாள் நன்றாக இருந்தது என்றால் உணவும் சிறப்பாக வரும்.
அப்படி வரவில்லை என்றால் அது எனக்கான நாளாக இல்லை. ஜாலியாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.