எழுந்து நடக்கக்கூட முடியாத நிலைக்கு சென்ற சிவாங்கி! தீயாய் பரவும் தகவல்
சூப்பர் சிங்கர் சிவாங்கி உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக சீசன் 4 வை சிறப்பித்து வருகிறார். சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.
சிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நண்பியாக நடித்திருப்பார்.
சிவாங்கி படுத்த படுக்கையாக இருக்க என்ன காரணம்?
இந்த நிலையில், குக் வித் கோமாளியில் முக்கிய குக்காக இருக்கும் சிவாங்கி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சிவாங்கி அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த இரண்டு நாட்களாக நான் காய்ச்சல் காரணமாக எழக் கூட முடியாமல் இருந்தேன். ஆனால் உங்களது அன்பும் காதலும் தான் என்னை இப்போது எழ வைத்துள்ளது. அன்பு நிகராக ஒன்றுமே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “ சிவாங்கிக்கு என்னாச்சி, அப்போ இனி ஷோல வர மாட்டாங்களா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Fever is spreading vastly so maskup everybodyyyy!!! Stay safe makkaleyyy tataa❤️#cookwithcomali4 #sivaangi
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) March 5, 2023